இந்தியா

தொடர்ந்து 3-வது நாளாக சரிவை சந்தித்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்

Published On 2024-12-18 11:07 GMT   |   Update On 2024-12-18 11:07 GMT
  • மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்ததுள்ளது.
  • நேற்று சென்செக்ஸ் 1,064.12 சரிவை சந்தித்த நிலையில் இன்று 502.25 புள்ளிகள் சரிந்தது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்றுடன் தொடர்ந்து 3-வது நாட்களாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.

இந்த நிலையில்தான் இன்றும் சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 80,684.45 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பமானது.

இன்று அதிகபட்சமாக 80,868.02 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,050.07 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக சென்செக்ஸ் 502.25 புள்ளிகள் குறைந்தது 80182.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்துள்ளது.

ஏற்றம் மற்றும் இறக்கம் கண்ட நிறுவன பங்குகள்

ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ., எல்&டி பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐ.டி.சி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.

இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50

இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50-யும் இன்று சரிவை சந்தித்தது. நிஃப்டி 137.15 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று நிஃப்டி 24,297.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 24,394.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,149.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 24,198.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags:    

Similar News