ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள்: ராணுவம்
- கடந்த ஆண்டு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை வலுப்படுத்த பாகிஸ்தான் முயன்றது.
- பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டன.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகள் ஊடுருவும்போது இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தலைநகர் புதுடெல்லியில் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவை மையமாகக் கொண்டு உலக நாடுகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக பாகிஸ்தான் விளங்குகிறது.
கடந்த ஆண்டு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை வலுப்படுத்த பாகிஸ்தான் முயன்றது. எனினும் பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சியால், ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், இந்தாண்டில் இதுவரை 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.