காருக்குள் பெங்காலி நடிகை.. கண்ணாடியை அடித்து உடைத்த பைக்கர்.. சாலையில் பரபரப்பு - வீடியோ
- பாயலின் கார் கண்ணாடியை அடித்து உடைத்த அந்த நபர் பாயலை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
- இந்த சம்பவம் தொடர்பாக பாயல் முகர்ஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி கார் மீது தாங்குதல் நடத்திய மர்ம நபர்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வைத்து பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை தெற்கு கொல்கத்தாவில் சதர்ன் அவென்யூ பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த பாயல் முகர்ஜியின் கார் அவ்வழியாக வந்த பைக் ஒன்றின் மீது லேசாக இடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பைக் ஓட்டுநர் பாயல் அமர்ந்திருந்த காரை கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதை காருக்குள் இருந்த பாயல் உடனே பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கினார்.
வெளியே வரும்படி பாயலின் கார் கண்ணாடியை அடித்து உடைத்த அந்த நபர் பாயலை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். காருக்குள் அமர்ந்திருத்த பாயல் யாராவது உதவிக்கு வரும்படி கூச்சலிட்டபடி இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
தன்னைத் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக அந்த நபர் மீது பாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். பாயல் கண்மூடித்தனமாக காரை ஓடிவந்து தனது பைக் மீது இடித்ததாக அந்த நபரும் பாயல் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாயல் முகர்ஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.