காரில் ரொமான்சுக்கு தடை போட்ட டிரைவர்
- வலைதள பயனர்கள் பலரும் கேப் டிரைவரின் வெளிப்படையான அறிவிப்பை பாராட்டி வருகின்றனர்.
- சில பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டனர்.
போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூரு நகரில் வாகன ஒட்டிகள் சிலர் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரங்கள், வசதிகள் செய்திருந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்து வைத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு வைரலாகி வருகிறது.
அதில், எச்சரிக்கை! வாகனத்தில் ஜோடிகள் ரொமான்ஸ் செய்யக்கூடாது. இது ஒரு கேப் வாகனம். இது உங்கள் தனிப்பட்ட இடமோ அல்லது ஓயோவோ அல்ல. எனவே தயவு செய்து தூரத்தை கடைபிடித்து அமைதியாக இருங்கள். மரியாதை கொடுங்கள், மரியாதை பெறுங்கள் என எழுதப்பட்டிருந்தது.
வைரலான இந்த எச்சரிக்கையை பார்த்த வலைதள பயனர்கள் பலரும் கேப் டிரைவரின் வெளிப்படையான அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். சில பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டனர்.