இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே பொருந்திய கட்சி அதிமுக- பவன் கல்யாண்
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர் என்று பவன் கல்யாண் கூறினார்.
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகச்சிறந்த தலைவர்.
ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பிரத்யேக பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுக கட்சி சிறப்பாக இருக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே பொருந்திய கட்சி அதிமுக, எனவே மீண்டும் பொருந்தலாமே.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகச்சிறந்த தலைவர். அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் உள்ளது.
பல திமுக எம்பிக்கள் இந்தியில் பேசுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் முன் வந்து இந்தியை எதிர்க்கிறார்கள்.
கண்மூடித்தனமாக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை. காலம் மாறிவிட்டது. தேசிய கல்வி கொள்கை இந்தியை திணிக்கவில்லை. ஆனால் திணித்தால் நானே எதிர்ப்பேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.