இந்தியா

பேட்மிண்டன் வீரர்களை துரத்தி துரத்தி அடித்த பீகார் சப் கலெக்டர்- அதிர்ச்சி வீடியோ

Published On 2024-12-03 07:32 GMT   |   Update On 2024-12-03 08:03 GMT
  • பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
  • இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் பேட்மிண்டன் வீரர்களை சப் கலெக்டர் ஒருவர் துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பேட்மிண்டன் வீரர்கள், "நாங்கள் உள்விளையாட்டு அரங்கில் விளையாடி முடித்து கிளம்பும் நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த துணை ஆட்சியர் சிஷிர் குமார் மிஸ்ரா எங்களிடம் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்டார். ஏற்கனவே விளையாடி முடித்த களைப்பில் இருந்த நாங்கள் சோர்வாக இருக்கிறது இப்போது விளையாட முடியாது என்று கூறினோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு எங்களை துரத்தி துரத்தி அடித்தார்" என்று தெரிவித்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த துணை ஆட்சியர் சிஷிர் குமார், "பேட்மிண்டன் வீரர்கள் என்னிடம் அநாகரீகமான மொழியில் பேசினார்கள். அதனால் தான் அடித்தேன்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தரன்ஜோத் சிங் தெரிவித்தார்.

Tags:    

Similar News