இந்தியா
பீகாரில் யூடியூப் வீடியோ பார்த்து சிகிச்சை அளித்த மருத்துவர் - நோயாளி உயிரிழப்பு
- தீபக் பாஸ்வான் என்ற இளைஞர் வாந்தி எடுத்தபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், யூடியூப் வீடியோ பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீபக் பாஸ்வான் என்ற 24 வயது இளைஞர் வாந்தி எடுத்தபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
யூடியூபை பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் அவரின் நிலை மோசமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.