சுவாதி மாலிவால் விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்ட பா.ஜ.க. கவுன்சிலர்கள்
- புகார் குறித்து விசாரித்து 3 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது.
- இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக பெண் எம்.பி சுவாதி மலிவால் டெல்லி போலீசிடம் முறையிட்டார். இந்தப் புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
விவாதத்தின் போது பங்கேற்ற பாஜக கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலித் மேயரை நியமிக்கக் கோரியும் முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
#WATCH | BJP councillors in MCD House raise slogans against Delhi CM Arvind Kejriwal on the issue of their demand for appointment of a 'Dalit' mayor and Swati Maliwal issue; House adjourned pic.twitter.com/rLJp1LA3oi
— ANI (@ANI) May 14, 2024