இந்தியா (National)

பதவியேற்றார் மக்களவை இடைக்கால சபாநாயகர்

Published On 2024-06-24 04:46 GMT   |   Update On 2024-06-24 04:46 GMT
  • ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.
  • பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜனதா தனித்து 240 இடங்களை பெற்றது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.

அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி, தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. பிரதமருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றதன் மூலம், நேருவின் சாதனையை சமன் செய்தார்.

இதையடுத்து 18-வது பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மஹ்தாபுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு மஹ்தாபு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

Tags:    

Similar News