இந்தியா
உள்நாட்டு விமான சேவை 2.5 மடங்கு அதிகரிப்பு: பாஜக எம்.பி. பெருமிதம்
- உலகின் 3-வது மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா விளங்குகிறது.
- உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 143 மில்லியனாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. நரசிம்மராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விமானப் போக்குவரத்து இன்று சாமானிய மனிதரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் உள்ளது.
உலகின் 3-வது மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா விளங்குகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
முன்பு 60 மில்லியனாக இருந்த உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, தற்போது 143 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அதேபோல், சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ம் ஆண்டு 43 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது 64 மில்லியனாக அதிகரித்துள்ளது.
நாட்டில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் 70 முதல் 80 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.