இந்தியா

மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: பா.ஜ.க. அலுவலகத்தில் சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை

Published On 2024-11-10 04:42 IST   |   Update On 2024-11-10 04:42:00 IST
  • பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது.
  • இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உஸ்தி நகரில் பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் உள்ளது. இதில், அக்கட்சி தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது. அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் காணப்படுகின்றன.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையான நபர் பிருத்விராஜ் நஸ்கார் என்பதும், கட்சியின் சமூக ஊடக பிரிவில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

இந்தப் படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்த மஜும்தார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியினரை மிரட்டுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

இதற்கிடையே, இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News