இந்தியா

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறோம்: மம்தா அறிவிப்பு

Published On 2024-06-08 13:44 GMT   |   Update On 2024-06-08 13:44 GMT
  • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
  • பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், நாளை பதவியேற்கும் பிரதமர் மோடியின் விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

"இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காது என யாரும் நினைக்க வேண்டாம். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்" என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News