கெயில் பெயரில் நடந்த பண மோசடி.. சகோதரியிடம் ரூ.2.8 கோடி பணம் வாங்கி ஏமாற்றிய சகோதரன்
- 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
- கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.
ஐதராபாத்தில் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயில் பெயரை வைத்து ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக சகோதரன் மீது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், "2019-ல் காபி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்கவுள்ளதாகவும், லாபத்தில் 4% பங்கு கொடுப்பதாகவும் சகோதரன் என்னிடம் உறுதியளித்தான். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.
சகோதரனின் பேச்சை நம்பி நானும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன். மேலும், தனது சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்தேன்.
ஆரம்பத்தில் எனக்கு லாபம் என பணம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை சகோதரன் நிறுத்தியுள்ளான். பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லையே என நான் சகோதரனிடம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளில் அவன் திட்டினான். மொத்தமாக ரூ.5.7 கோடி கொடுத்ததில் ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நன் ஆளாகியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.