null
எனது அப்பாவின் டீ கடைக்கு வந்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் - பிரதமர் மோடி
- எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் டீ கடைக்கு செல்வார்.
- டீ கடையில் கற்ற அனுபவங்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், தனது குழந்தை பருவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நான் என் தந்தையின் தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அந்தக் கற்றல்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி, பல கோயில்களுக்குச் சென்று, பின்னர் தான் டீ கடைக்கு செல்வார். கிராமத்தில் உள்ள மக்கள் எனது அப்பாவின் காலடிச் சத்தத்தை கேட்டாலே அந்த நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமாக இருந்தார்.
என் குழந்தைப்பருவம் பெரும் வறுமையிலேயே கழிந்தது. என் வெள்ளை ஷூ-வை பாலிஷ் போட சாக்பீஸ் சேகரித்துக் கொண்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.