இந்தியா

கொலையில் முடிந்த ஹோலி: பக்கத்து வீட்டில் பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் மோதல் - முதியவர் பலி

Published On 2025-03-16 13:02 IST   |   Update On 2025-03-16 13:02:00 IST
  • குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.
  • தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பக்கத்து வீட்டில் பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் 64 வயது முதியவர் கொலை செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள மான்கிசர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஹோலி கொண்டாட்டத்தின்போது தனது வீட்டில் தீபு கேவத் என்பவர் அதிக ஒலியில் பாட்டு போட்டுள்ளார். இந்நிலையில் அவரது பக்கத்துக்கு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சங்கர் கேவத் தனது குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரதமடைந்த தீபுவும் அவரது ஐந்து உறவினர்களும் சங்கர், அவரது தந்தை முன்னா கேவத் (64 வயது) மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதில் தந்தை முன்னா கேவத் படுகாயமடைந்தார்.

தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் முன்னா கேவத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் தலைறைவாகினர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News