காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி: பிரதமர் மோடி கடும் தாக்கு
- காங்கிரஸ் கட்சி நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது.
- நாட்டு மக்களை காங்கிரஸ் எப்போதுமே தவறாக வழி நடத்துகிறது.
அரியானாவில் பா.ஜ.க. வெற்றி பெற்றதும் டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம் நடந்தது. பிரதமர் மோடி அதில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. பண்பாடு, கலாச்சாரத்துக்கு எதிரானவர்களை ஊக்குவித்து அதன் மூலம் காங்கிரஸ் குளிர்காய நினைக்கிறது. இந்தியாவின் பெருமையை சீர்குலைப்பது காங்கிரசின் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம், போலீஸ் நிலையம், நீதித்துறை போன்றவற்றை காங்கிரஸ் கண்ணிய குறைவாக நடத்துகிறது. அரியானா மாநில மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
நாட்டு மக்களை காங்கிரஸ் எப்போதுமே தவறாக வழி நடத்துகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி கட்சியாகும். அது கூட்டணி கட்சிகளை நிச்சயம் விழுங்கும்.
கூட்டணி கட்சிகளுக்கு அது பிறகுதான் தெரிய வரும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.