இந்தியா
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார் - கெஜ்ரிவால் மீது FIR பதிய நீதிமன்றம் உத்தரவு
- விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்
- மார்ச் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு டெல்லியின் துவாரகா பகுதியில் பெரிய விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை மார்ச் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.