இந்தியா
அநீதிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடும்: ராகுல் காந்தி
- ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மேற்கு வங்காளத்தை வந்தடைந்தது.
- இந்தியா கூட்டணி அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் என்றார் ராகுல் காந்தி.
கொல்கத்தா:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரை வந்தடைந்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:
மேற்கு வங்காளத்துக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் வெறுக்கத்தக்க பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இந்தியா கூட்டணி அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டி என தெரிவித்துள்ள நிலையில், ராகுலின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.