இந்தியா

ஒடிசா முதல்-மந்திரியாக தர்மேந்திர பிரதான் தேர்வு?

Published On 2024-06-05 06:24 GMT   |   Update On 2024-06-05 06:24 GMT
  • பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
  • 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள147 தொகுதிகளில் 78 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது.

51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் பா.ஜனதா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க தர்மேந்திர பிரதான் முக்கிய பங்காற்றினார். அக்கட்சி ஒடிசாவில் அமோக வெற்றி பெற தேர்தல் அறிக்கையும் முக்கிய காரணமாகும்.

அவர் தேர்தல் அறிக்கையை உருவாக்கிய குழுவை வழிநடத்தினார். இதில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100 வழங்கப் படும், சுபத்ரா யோஜனாவின் கீழ் பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் ஆகிய வாக்குறுதிகள் ஒடிசா மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதற்காக தர்மேந்திர பிரதானை பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா பாராட்டி இருந்தனர். மேலும் வி.கே. பாண்டியன் மீது விமர்சனம் மற்றும் பூரி ஜெகன்நாதர் கோவில் விவகாரம் குறித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து தர்மேந்திர பிரதான் ஒடிசா முதல்-மந்திரி பதவிக்கான முதல் போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.

Tags:    

Similar News