இந்தியா

இந்தோனேசிய அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2025-01-25 05:09 IST   |   Update On 2025-01-25 05:09:00 IST
  • குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தோனேசிய அதிபர் வந்துள்ளார்.
  • வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசிய அதிபரை நேற்று சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி:

76-வது குடியரசு தினவிழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப்பிலும் வெளிநாட்டைச் சேர்ந்த அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார்.

இதற்கிடையே, குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ டெல்லி வந்துள்ளார். அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கிரெட்டாவரவேற்றார். அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

அதன்பின், குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் பொருத்தமான கொண்டாட்டமாக இருக்கும் என தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் இன்று பேச்சு நடத்த உள்ளார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News