இந்தியா

இரண்டு ஆண்டுகளாக சம்மன், சோதனை, கைது: ஒரு ரூபாய் கூட... டெல்லி மந்திரி அதிஷி ஆவேசம்

Published On 2024-02-06 11:45 IST   |   Update On 2024-02-06 11:45:00 IST
  • கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.
  • இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்மேல் சம்மனாக கொடுத்து வருகிறது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.

இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய பலரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி கூறியதாவது:-

கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். மதுபான ஊழல் என்ற பெயரில் இது நடந்து வருகிறது. சிலரின் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது. சிலருக்கு சம்மன் கொடுக்கப்படுகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டும்கூட, அமலாக்கத்துறையால் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப முடியவில்லை.

இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றமும் ஆதாரங்களை வழங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆம் ஆத்மி தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி பொருளாளர், எம்.பி. குப்தா, கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் பலருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சாட்சிகளின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ அழிக்கப்பட்டுள்ளது. அதை நாட்டு மக்களுக்கு முன் கொண்டு வாரங்கள் பார்ப்போம். ஆம் ஆத்மி கட்ச தலைவர்கள் குரலை ஒடுக்கவதற்காக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக போலி அறிக்கைகள் வழங்குமாறும் அமலாக்கத்துறை கட்டாயப்படுத்துகிறது. மிரட்டுகிறது.

மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால், நாங்கள் பயப்படமாட்டோம் என்பதை அவருக்கு சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை நாளை (இன்று) 10 மணிக்கு வெளிப்படுத்த இருக்கிறேன் எனக் குறிப்பிடடிநர்தார். அவருடைய மந்திரி சபையில் இருக்கும் சவுரப் பரத்வாஜ், பா.ஜனதாவின் பணம் சுரண்டும் துறையின் மிகப்பெரிய அம்பலம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் இன்று காலை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

Tags:    

Similar News