இந்தியா
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஓடும் ரெயிலில் முதியவரை சரமாரியாக தாக்கிய சக பயணிகள் - வீடியோ
- முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.
- சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஸ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.
அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சித் துண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. அது மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டிய சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.