ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு
- ஜம்மு பிராந்தியத்தில் 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு.
- ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந்தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 40 தொகுதிகளில் காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கதுவா மாவட்டம் பில்வாரில் நடந்த என்கவுன்டரில் காயமடைந்த டி.எஸ்.பி. உக்பீர் சிங் இன்று உதம்பூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். உடன் அவரது மனைவியும் வாக்களித்தார்.
"ஜம்மு காஷ்மீரில் முழு மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் பங்கேற்றுள்ளேன். ஜம்மு காஷ்மீருக்காக பணியாற்றும் ஒரு பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அமைதி நிலவும் போதுதான் ஜம்மு காஷ்மீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்," என்று சுயேட்சை வேட்பாளர் அஜாஸ் அகமது குரு தெரிவித்தார்.
5 மணி நிலவரப்படி 65.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தலில் மதியம் 3 மணிவரை 56.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் காலை 9 மணி நிலவரப்படி 40 தொகுதிகளில் தோராயமான 11.60 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் 11 மணிவரை 28.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாரமுல்லாவில் குறைந்தபட்சமாக 23.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பந்திபோராவில் 28.04 சதவீதம், ஜம்முவில் 27.15 சதவீதம், கத்துவாவில் 31.78 சதவீதம், குப்வாராவில் 27.34 சதவீதம், சம்பாவில் 31.50 சதவீதம், உதம்பூரில் 33.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக வாக்களித்துள்ளனர். இது ஒரு வரலாற்று தருணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் காலை 9 மணி நிலவரப்படி 40 தொகுதிகளில் தோராயமான 11.60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பாரமுல்லாவில் குறைந்தபட்சமாக 8.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பந்திபோராவில் 11.64 சதவீதம், ஜம்முவில் 11.46 சதவீதம், கத்துவாவில் 13.09 சதவீதம், குப்வாராவில் 11.27 சதவீதம், சம்பாவில் 13.31 சதவீதம், உதம்பூரில் 14.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
உதம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்.
குலாம் நபி ஆசாத் தனது வாக்கை பதிவு செய்தார்