இந்தியா
தெலுங்கானாவில் கார் குளத்தில் பாய்ந்து 5 பேர் பலி
- மணிகண்டா மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து அலறி கூச்சலிட்டார்.
- காரின் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பேரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயாத் நகரை சேர்ந்தவர்கள் ஹர்ஷா, தினேஷ், வம்சி, பாலு, வினய், மணிகண்டா. நண்பர்களான இவர்கள் 6 பேரும் இன்று அதிகாலை நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டு இருந்தனர்.
போச்சம்பள்ளி, ஜலால்பூர் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குளத்தில் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. மணிகண்டா மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து அலறி கூச்சலிட்டார்.
அப்பகுதியினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காரின் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பேரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.