இந்தியா
ஆந்திராவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
- அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
- பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியால் அடுத்த சார்பு ரேவூவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் சுப்பம்மா (வயது 60), தினேஷ் (10) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நந்தியால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.