ரூ.3000 போதும் - எத்தனை முறை வேண்டுமானாலும் கடக்கலாம்!
- திட்டத்தை பரிசீலனை முடிந்து விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், ஃபாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும்.
இன்றைய காலக்கட்டத்தில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி செல்வோர் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வரிசையில் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம்... சுங்கச்சாவடிகளில் பல மணி நேரத்திற்கு நீண்ட வரிசை இருக்கும்.
அதிலும், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்துவதற்கும் வாங்குவதற்கும் நேரம் ஆகுவதால் பல மணிநேரம் வாகனங்கள் காத்து நிற்க வேண்டி உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையிலும், சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
* வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை கார்கள் (Private Cars) இலவசமாக கடக்கும் புதிய திட்டம்.
* மத்திய அரசின் புதிய திட்டம் மூலம் ஒரு முறை ரூ.3000 கட்டணம் செலுத்தினால் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.
* ஒரு முறை ரூ.3000 செலுத்தி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கடக்கலாம்.
* ரூ.30,000 செலுத்தினால் 15 வருடங்களுக்கு வேறு கட்டணம் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.
* ஒரு முறை ரூ.3000 கட்டணம் செலுத்தி பல முறை பயணம் செய்யும் திட்டத்தை பரிசீலனை முடிந்து விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
* இந்த திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், ஃபாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும்.