இந்தியா

மசாஜ், ஸ்பா நிறுவனங்கள் நடத்தினால்... கருத்து கணிப்பு குறித்து ஆம் ஆத்மி எம்.பி. காட்டமான பதில்

Published On 2025-02-06 15:16 IST   |   Update On 2025-02-06 15:22:00 IST
  • டெல்லி சட்டமன்ற தேர்தல் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பை வெளியிட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை பிடிக்கும். அதுவும் தனி மெஜாரிட்டியுடன் பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும் என வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் இதுபோன்றுதான் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் கருத்து கணிப்பை பொய்யாக்கி ஆட்சியை பிடித்தோம் என ஆம் ஆத்மி கட்சி தலைவரகள் தெரிவித்துள்ளனர். அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் "ஆத்மி ஆத்மிக்கு எதிராக கருத்து கணிப்புகள் எப்போதும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி (நாளைமறுதினம்) வரை காத்திருக்க வேண்டும் என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது:-

மசாஜ், ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தை கருத்து கணிப்புகள் நடத்தினால், கணிப்பின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியும். பிப்ரவரி 8-ந்தேதி வரை காத்திருக்க வேண்டும் என எல்லோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். எங்களால் பேசிய விசயங்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில், பாஜக 35-40 இடங்களையும், ஆம் ஆத்மி 32-37 இடங்களையும், காங்கிரஸ் 0-1 இடங்களையும் வெல்லும் என்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 51-60 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 10-19 இடங்களையும், காங்கிரஸுக்கு 0 இடங்களையும் வெல்லும் என்றும் என்.டி டிவி கருத்து கணிப்பில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 தொகுதிகளில் வெல்லும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-1 இடங்களை பிடிக்கும் என்றும் டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் டெல்லியில் பாஜக 37-43, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 40-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-29 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் பி-மார்க் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-49 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 21-31 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் ஜேவிசி கருத்துக்கணிப்பில் பாஜக 39-45 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 22-31 இடங்களையும், காங்கிரஸ் 0-2 இடங்களையும் பெறும் என்றும் சாணக்யா கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-28 இடங்களும், காங்கிரசுக்கு 2-3 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News