இந்தியா
வீடியோ: ஜனாதிபதியை குடும்பத்துடன் சந்தித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்
- சச்சின் மனைவி மற்றும் மகளுடன் ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
- ஜனாதிபதிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது கையொப்பமிட்ட டெஸ்ட் ஜெர்சியை வழங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை மரியாதை நிமர்த்தமாக குடும்பத்துடன் சந்தித்தார். சச்சின் மற்றும் அவரது மனைவி, மகள் சாரா ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் ஜனாதிபதிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது கையொப்பமிட்ட டெஸ்ட் ஜெர்சியை வழங்கினார். பின்னர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
சச்சின் டெண்டுல்கர், இந்த மாதம் இறுதியில் நடக்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.