இந்தியா
VIDEO: மத்தியப்பிரதேசத்தில் ராணுவ பயிற்சி விமானம் வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது
- மிராஜ் 2000 விமானம் பயிற்சியின் போது, சிஸ்டம் கோளாறால் விபத்துக்குள்ளானது.
- விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
மத்தியபிரதேச மாநிலம் ஷிவ்புரியில் ராணுவ பயிற்சி விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் கீழே விழுவதற்குள் விமானிகள் வெளியேறியதால் உயிர் தப்பினார். ஆனாலும் விமானிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானம், சிவ்புரி (குவாலியர்) அருகே இன்று வழக்கமான பயிற்சியின் போது, சிஸ்டம் கோளாறால் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.