இந்தியா
மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
- மும்பையில் நேற்று காலை பருவமழைக்கு முந்தைய மழை பெய்தது.
- மும்பை, தானே மற்றும் ராய்காட் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்க உள்ளது. மும்பையில் நேற்று காலை பருவமழைக்கு முந்தைய மழை பெய்தது. நேற்று பெய்த பலத்த மழையால் அங்கு நிலவி வந்த கடுமையான வெப்பம் நீங்கியது.
மேலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதோடு, குளிர்ச்சியான சூழல் நிலவியது. தானே மாவட்டத்திலும் மழை பெய்தது. நேற்று தொடங்கிய மழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மும்பை, தானே மற்றும் ராய்காட் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.