இந்தியா

தாலி கட்டும் நேரத்தில் செல்போனில் கேம் விளையாடிய மணமகன்

Published On 2024-12-03 07:29 IST   |   Update On 2024-12-03 08:29:00 IST
  • திருமணத்தின்போது மணமகளுடன் தன் இல்லற வாழ்வை பகிர்த்து கொள்ள தாலிகட்டும் நேரத்தை எதிர்பார்த்து மணமகன் காத்திருப்பது இயல்பு.
  • புரோகிதர், புகைப்பட கலைஞர் ஆகியோர் இருந்தநிலையில் அவா் கூலாக கேம் ஆடினார்.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது பழமொழி. நமது இந்திய நாட்டு கலாசாரத்தின்படி திருமணம் பந்தத்தில் இணையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக தாலிகட்டும் நிகழ்வு கருதப்படுகிறது.

திருமணத்தின்போது மணமகளுடன் தன் இல்லற வாழ்வை பகிர்த்து கொள்ள தாலிகட்டும் நேரத்தை எதிர்பார்த்து மணமகன் காத்திருப்பது இயல்பு. இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் திருமணம் ஒன்று சமீபத்தில் நடந்தது.

இதில் மணமகன் அலங்காரத்துடன் திருமணத்துக்கு தயாரான நிலையில் வாலிபர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். தாலி கட்டுவதற்கு மணமகளுக்காக அவர் காத்திருக்கும் சமயத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடினார். அருகே புரோகிதர், புகைப்பட கலைஞர் ஆகியோர் இருந்தநிலையில் அவா் கூலாக கேம் ஆடினார். இதுதொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி ஒருசில நாட்களில் 4 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

Tags:    

Similar News