இந்தியா

தெலுங்கானாவில் ஆட்டோ டிரைவர் சீருடை அணிந்து சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள்

Published On 2024-12-19 06:04 GMT   |   Update On 2024-12-19 06:04 GMT
  • கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்தனர்.
  • ஆட்டோ டிரைவர்களின் தற்கொலைகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் துயரமாக மாறிவிட்டது.

திருப்பதி:

தெலுங்கானாவில் எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் கே.டி. ராமராவ் தலைமையில் ஆட்டோ டிரைவர் சீருடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் வந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 நிதியுதவி மற்றும் நல வாரியம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. ஆட்டோ டிரைவர்களின் தற்கொலைகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் துயரமாக மாறிவிட்டது.

ஆட்டோ டிரைவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்த ப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்டோ டிரைவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணிந்து வந்ததால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News