இந்தியா

மாஸ் காட்டிய ஸ்பேஸ் டாக்கிங் சிஸ்டம்.. 4வது நாடாக இணைந்த இந்தியா - மத்திய அமைச்சர் பெருமிதம்

Published On 2024-12-31 01:25 GMT   |   Update On 2024-12-31 01:25 GMT
  • 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு (டிச.30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஏவப்பட்ட ராக்கெட், ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார். பதிவில், "சர்வதேச அதிசயங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்து இருப்பது பெருமை அளிக்கிறது."

"ஸ்பேஸ் டாக்கிங் தேடும் நாடுகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் நான்காவது இந்தியா இணைந்து இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "பாரதிய டாக்கிங் சிஸ்டம்" மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது."

"ஆத்மனிர்பார்-இல் இருந்து விக்சித் பாரத்-க்கு முன்னேறும் பிரதமர் மோடியின் குறிக்கோளுக்கு நன்றி. இந்த குறிக்கோள் தான் நம் பயணத்தை விண்வெளித்துறையில் "ககன்யான்" மற்றும் "பாரதிய அந்த்ரிக்ஷா ஸ்டேஷன்" ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும்," என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News