இந்தியா
காங்கிரஸ் தலைவர் சர்மிளாவின் உறவினர் ஓட்டலில் வருமான வரி சோதனை
- சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
- ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா. இவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். சமீபத்தில் இவரது மகனுக்கும் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது.
சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
அங்குள்ள அறைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் பலவிதமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓட்டலில் பணம் ஆவணங்கள் கைப்பற்றியது குறித்து ஓட்டல் நிர்வாகம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை.