இந்தியா

ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 54% வாக்குப்பதிவு

Published On 2024-09-25 06:31 IST   |   Update On 2024-09-25 19:13:00 IST
  • பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு
  • 25.78 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த வாரம் 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

2024-09-25 09:51 GMT

ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது வரலாற்றை உருவாக்கி வருகிறது. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பகுதிகளில் ஆர்வமுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

2024-09-25 08:13 GMT

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2024-09-25 06:55 GMT

மக்கள் அதிக அளவில் திரண்டு வரிசையில் நின்று வாக்களித்து வருவது சிறந்த அறிகுறியை காட்டுகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது. மற்றும் வளர்ச்சியை நோக்கி ஜம்மு-காஷ்மீர் முன்னோக்கி வருகிறது. இவைகள் பாஜகவுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

2024-09-25 06:21 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 24.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024-09-25 06:03 GMT

இது தொடர்பாக 27-புட்காம் தேர்தல் அதிகாரி அஃப்ரோசா கூறுகையில் "வாக்காளர் ஒருவர் வாக்களிக்க வந்திருந்தார். திடீரென அவரது வாக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நான் வாக்காளர் பட்டியலை பரிசோதித்து பார்த்தேன். அப்படி ஏதும் இல்லை. அவர் வாக்கு ஸ்லிப் கொண்டு வரவில்லை. இதனால் அவரிடம் கேட்கப்பட்டது. அவர் வேறு ஏதாவது ஆவணங்களாவது கொண்டு வந்திருக்க வேண்டும். வாக்கு மையத்தில் உள்ள அதிகாரிகள் அவரிடம் ஏதாவது அடையாள அட்டை இருக்கிறதா? என்று கேட்டனர். பின்னர் அவர் வாக்காளர் ஸ்லி்பை கொடுத்தார். அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்" என்றார்.

2024-09-25 05:57 GMT

புட்காம் மாவட்டத்தின் சராரி ஷெரீப் சட்டமன்ற தொகுதியில் பிடிபி கட்சி சார்பில் போட்டியிடும் குலாம் லோன் கஞ்ஜுனா தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "இங்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் வாக்களிப்பதற்காக 10 வருடங்கள் காத்திருந்தனர். வாக்காளர்கள் மிகவம் ஆர்வாகமாக இருக்கிறார்கள்" என்றார்.

2024-09-25 04:43 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர அதிகாரிகள் தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்பதை புட்காம் பகுதியில் உள்ள வாக்கு மையத்தில் பார்வையிட்டனர்.

2024-09-25 04:38 GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தோராயமாக 10.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024-09-25 04:12 GMT

பாரா ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வனெ்ற ராகேஷ் குமார் கட்ராவில் உள்ள வாக்கு மையத்தில் வாக்கு செலுத்தினார்.

2024-09-25 03:59 GMT

"ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா கந்தர்பால் மற்றும் புட்காம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் 2-வது கட்ட வாக்குப்பதிவு குறித்து கூறும்போது "நாம் இந்த தேர்தலுக்காக 10 வருடம் காத்திருந்தோம். முதல் கட்ட தேர்தல் நல்ல முறையில் நடந்து முடிந்தது. 2-வது கட்ட தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். இந்த பங்கேற்பு இந்திய அரசாங்கத்தால் அல்ல, இந்திய அரசாங்கம் செய்த அனைத்தையும் மீறி. மக்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள், மக்களைத் தடுத்து நிறுத்தி துன்புறுத்துவதற்கு அரசாங்கத்தின் அனைத்து இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. எல்லா தேர்தல் நாட்களும் முக்கியமானவை. இந்த தேர்தலில் எனக்கு தனிப்பட்ட பங்கு உள்ளது ஆனால் எல்லா கட்டங்களும் முக்கியமானவை” என உமர் அப்துல்லா தெரிவித்தார்.

Tags:    

Similar News