இந்தியா

நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க நடைபயணம் தொடங்கிய கேரள ரசிகர்

Published On 2025-01-03 15:36 IST   |   Update On 2025-01-03 15:36:00 IST
  • அண்டை மாநிலமான கேரளாவில் தமிழகத்திற்கு சரிசமமாக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
  • நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது.

திருவனந்தபுரம்:

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தனது அதிரடி நடிப்பின் மூலம் சிறு குழந்தைகள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரின் மனம் கவர்ந்த இவருக்கு தமிழகம் மட்டு மின்றி பல மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் அண்டை மாநிலமான கேரளாவில் தமிழகத்திற்கு சரிசமமாக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனை அவர்கள் ஒவ்வொரு விஜய் படமும் வெளியாகும்போதும் வெளிக்காட்டுவதை பார்க்க முடியும்.

சமீபத்தில் வெளியான "தி கோட்" படத்தின் முதல் காட்சி கேரள மாநிலத்தில் அதிகாலையில் வெளியானது. படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் முதல் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். படத்தை பார்த்து திரும்பிய ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஆச்சரியப்படுத்தினர்.

இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், அவரை சந்திப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியை சேர்ந்தவர் உன்னி கண்ணன். 33 வயதான இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.

நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது. இதற்காக அவர் தற்போது சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். வாலிபர் உன்னி கண்ணன் தனது நடை பயணத்தை புத்தாண்டு தினத்தில் தனது வீட்டில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கினார்.

கழுத்திலும், கையிலும் நடிகர் விஜய் படம் அடங்கிய சுவரொட்டியுடன் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். வாலிபர் உன்னி கண்ணன், நடிகர் விஜய்யை பல முறை நேரில் சந்திக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இதுவரை அவரை சந்திக்க முடியாமல் போனது.

இதனால் நடிகர் விஜய்யை எப்படியாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்து வருகிறது. தனது ஆசையை நிறைவேற்ற நடை பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து நெருக்கமாக நின்று புகைப் படம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சென்னையை நோக்கி நடை பயணம் மேற் கொண்டிருக்கிறார்.

Tags:    

Similar News