இந்தியா

நிதி ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு 7 நாள் கெடு விதித்தார் மம்தா பானர்ஜி

Published On 2024-01-27 06:53 IST   |   Update On 2024-01-27 06:57:00 IST
  • பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
  • கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கான நிதியை ஒதுக்காமல் நிலுவை வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி மம்தா பானர்ஜி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால் ஒருமாதமாகியும் மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஏழு நாள் கெடுவிதித்துள்ளார்.

நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் "நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றால், நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள்  இணைந்து செயல்படுத்தப்படுகிறது. திட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட நிதியையும், மாநில அரசு ஒரு குறிப்பிட்ட நிதியையும் ஒதுக்கும்.

அந்த வகையில் மத்திய அரசு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மேற்கு வங்காளத்திற்கு ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பதாக மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News