இந்தியா

பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

Published On 2023-12-12 13:28 IST   |   Update On 2023-12-12 13:28:00 IST
  • வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார்.
  • மேற்கு வங்காள மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்துவார் எனத் தகவல்.

இந்திய அரசியலில் பிரதமர் மோடிக்கு நேர் எதிர் துருவமாக இருப்பவர் மம்தா பானர்ஜி. மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கடும் விமர்சனம் செய்பவர். பிரதமர் மோடி மேற்கு வங்காளம் சென்றபோது ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது பாதிலேயே எழுந்து சென்றனர். இதனால் பிரதமருக்கு மோடிக்கு மதிப்பளிக்கவில்லை என மத்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் மத்திய அரசை சாடியிருந்தார்.

இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். 20-ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்க மம்தா நேரம் கேட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் அவரது கோரிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது. டிசம்பர் 20-ந்தேதி காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

100 நாட்கள் வேலை திட்டம் உள்ளிட் பல்வேறு துறைகளில் 1.15 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு மேற்கு வங்காள மாநிலத்திற்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின்போது, நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News