இந்தியா
ஓட்டுநர் இல்லாமல் தீப்பிடித்து ஓடிய கார்.. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் - வீடியோ வைரல்
- மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
- உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அஜ்மீர் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் தீப்பிடித்தது தெரிந்தவுடன் ஓட்டுநர் ஜிதேந்திர ஜாங்கிட் உடனடியாக காரை நிறுத்தி வெளியேறினார்.
மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இல்லாத கார் முன்னாள் இருந்து பொதுமக்களை நோக்கி சாலையில் தானாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதனை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். பின்னர் கார் அங்கிருந்த டிவைடரில் மோதி நின்றது.
உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.