இந்தியா

ஏரிகளில் நீர் இருப்பு 7 சதவீதமாக குறைவு- மும்பையில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம்

Published On 2023-06-28 14:46 IST   |   Update On 2023-06-28 14:46:00 IST
  • 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டில், ஏரிகளில் முறையே 9.04 சதவீதம் மற்றும் 16.44 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.
  • தண்ணீரைச் சேமிக்கவும், அதை நியாயமாகப் பயன்படுத்தவும் குடிமக்களுக்கு வேண்டுகோள்.

மும்பையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், மும்பைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், ஜூலை 1ம் தேதி முதல் 10 சதவீதம் குடிநீர் விநியோகத்தை குறைக்க நகர சிவில் அமைப்பு முடிவு செய்துள்ளது.

மும்பை, தானே மற்றும் நாசிக் மாவட்டங்களில் அமைந்துள்ள பாட்சா, அப்பர் வைதர்ணா, மிடில் வைதர்ணா, தன்சா, மோடக் சாகர், விஹார் மற்றும் துளசி ஆகிய ஏழு நீர்த்தேக்கங்களிலிருந்து 3,800 MLD (ஒரு நாளைக்கு மில்லியன் லிட்டர்) தண்ணீரை மும்பை பெறுகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏழு ஏரிகளில் 7.26 சதவீதம் இருப்பு இருந்ததாக குடிமை அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டில், ஏரிகளில் முறையே 9.04 சதவீதம் மற்றும் 16.44 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.

இதுகுறித்து பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கமிஷனர் இக்பால் சிங் சாஹல் கூறுகையில், " மும்பையில் ஜூலை 1ம் தேதி முதல் 10 சதவீதம் குடிநீர் விநியோகத்தை குறைக்கும் நடவடிக்கையை அமல்படுத்த பிஎம்சி முடிவு செய்துள்ளது. நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் ஏழு சதவீத நீர் இருப்பு உள்ளது.

இதனால், தண்ணீரைச் சேமிக்கவும், அதை நியாயமாகப் பயன்படுத்தவும் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது" என்றார்.

Tags:    

Similar News