இந்தியா
இன்னைக்கு ஒரு புடி.. மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை ஒட்டி கைதிகளுக்கு மட்டன் பிரியாணி
- மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன.
- நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு அசைவ உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு அம்மாநில கைதிகளுக்கு சிறையில் மட்டன் பிரியாணியும் பசந்தி புலாவும் உணவாக வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு இந்த புதிய உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது. துர்கா பூஜை விழாவின் போது சமையற்காரர்களாக பணிபுரியும் கைதிகளே இந்த உணவு வகைகளை சமைக்கவுள்ளார்கள்.
கைதிகளின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், விருப்பப்படும் கைதிகளுக்கு மட்டும் தான் அசைவ உணவு வழங்கப்படும் என்றும் பண்டிகை உணர்வை கைதிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.