இந்தியா
அடுத்த மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்: நிதி மந்திரி
- புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
- வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
புதுடெல்லி:
புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது:
புதிய வருமான வரி மசோதா பாராளுமன்றத்தின் அடுத்த மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நிதி மசோதா 2025, வரி செலுத்துவோரை கவுரவிப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வரி நிவாரணத்தை வழங்குகிறது.
சர்வதேச பொருளாதார நிலையில் உள்ள நிச்சயமற்ற தன்மையை நிவர்த்தி செய்ய ஆன்லைன் விளம்பரங்கள் மீதான சமன்படுத்தல் வரி ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.