இந்தியா

மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது: நிர்மலா சீதாராமன்

Published On 2024-02-01 11:45 IST   |   Update On 2024-02-01 11:45:00 IST
  • இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
  • விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் படித்து வருகிறார்.

அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

* இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது.

* பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளும் துடிப்புடன் பங்காற்றி வருகின்றன.

* அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடையும்.

* கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

Similar News