இந்தியா

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு: விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2024-12-13 15:01 IST   |   Update On 2024-12-13 15:08:00 IST
  • செந்தில்பாலாஜி உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
  • அமலக்கத்துறை தரப்பில் வாதிட்ட வக்கீல்கள் தங்கள் தரப்பில் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.

புதுடெல்லி:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்த செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்த போது செந்தில்பாலாஜி தரப்பில் அமைச்சரான பின்னர் அவர் ஜாமீன் பெற்றது தொடர்பாக விளக்கம் பெற்று வந்துள்ளோம். ஆனால் இந்த வழக்கில் வாதம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராக பதவியேற்றது ஏன்? என்பது தொடர்பாக செந்தில்பாலாஜி உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே கூறினோம். அதனால்தான் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை.

ஆனால் தற்போது வாதம் செய்ய வேண்டும் என்று நிலைப்பாட்டை மாற்றி கூறுகிறீர்கள். எனவே அதனை ஏற்க முடியாது என்றனர். இது தொடர்பாக வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் விளக்கம் அளிக்கிறோம். ஆனால் தற்போது வாதம் செய்யக்கூடாது என்பது ஏற்கதக்கதல்ல என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், கூடுதலாக இந்த விசயத்தில் எதுவும் கூற விரும்பவில்லை. வழக்கை வருகிற 18-ந் தேதி (புதன்கிழமை) ஒத்தி வைக்கிறோம் என்றனர்.

அமலக்கத்துறை தரப்பில் வாதிட்ட வக்கீல்கள் தங்கள் தரப்பில் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News