ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது: பிரசாந்த் கிஷோர் கருத்து
- பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
- நான் சட்ட நிபுணர் அல்ல.
புதுடெல்லி :
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் (தேர்தல் வியூக வல்லுனர்) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில் அவர்...
நான் சட்ட நிபுணர் அல்ல. இருப்பினும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. இது முதல் நிகழ்வும் அல்ல, கடைசி நிகழ்வாகவும் இருக்காது.
சிறிய இதயம் படைத்த யாரும் மாமனிதர்களாக மாற மாட்டார்கள் என்ற அடல்பிகாரி வாஜ்பாயியின் பிரபலமான வரியை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்கள் பெரிய மனதைக் காட்டி இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அங்கு நிவாரணம் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.