இந்தியா

ஜனாதிபதி பிறந்தநாள்- பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் வாழ்த்து

Published On 2024-06-20 06:02 GMT   |   Update On 2024-06-20 06:02 GMT
  • ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும் வலியுறுத்தலும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாகும்.
  • உங்களின் தலைமையும் அர்ப்பணிப்பும் நம் தேசத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

ஜனாதிபதிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது முன்மாதிரியான சேவை மற்றும் நம் தேசத்திற்கான அர்ப்பணிப்பு நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும் வலியுறுத்தலும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாகும். அவரது வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அவரது அயராத முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு தலைமைக்கு இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,

ஜனாதிபதி அவர்கள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நிறைவான வாழ்க்கை அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில்,

இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களின் தலைமையும் அர்ப்பணிப்பும் நம் தேசத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News