எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் கடும் அமளி.. மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு
- நேற்று நடந்த அமளியில் தள்ளிவைக்கப்பட்ட அவை இன்று மதியம் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.
- சோரோஸ் விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சி என்று நட்டா குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் அவைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், காங்கிரஸ் - ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக இன்று ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த அமளியில் தள்ளிவைக்கப்பட்ட அவை இன்று மதியம் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.
அவையில் ஆளும் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா, அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் நிதி அமைப்புகளுடன் சேர்ந்த காங்கிரஸ் நாட்டை சீர்குலைக்க காங்கிரஸ் முயல்கிறது என்றும் அதன் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது சோரோஸ் விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சி என்று நட்டா குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பு எம்பிக்களும் மேஜையில் இருந்து எழுந்து முழக்கம் எழுப்பிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.