அம்பேத்கரும் மோடியும் புத்தகம் வெளியீடு- அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை
- முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புத்தகத்தை வெளியிட்டார்.
- மோடியை அம்பேதக்ருடன் ஒப்பிட்டு இளையராஜா அணிந்துரை எழுதியது விவாதப்பொருளாக மாறியது
புதுடெல்லி:
சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டு 'அம்பேத்கரும் மோடியும்' என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புத்தகத்தை வெளியிட்டார்,
விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் இப்புத்தகத்திற்கு அணந்துரை எழுதிய இளையராஜா விழாவில் பங்கேற்கவில்லை.
பிரதமர் மோடியை அம்பேதக்ருடன் ஒப்பிட்டு இப்புத்தகத்திற்கு இளையராஜா அணிந்துரை எழுதியது விவாதப்பொருளாக மாறியது. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்த போதிலும் இளையராஜா இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.