இந்தியா
கர்நாடக அணைகளில் இருந்து 6ஆயிரத்து 75 கனஅடி தண்ணீர் திறப்பு
- அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 1180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6ஆயிரத்து 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.