இந்தியா
RG Kar hospital crime scene was altered?

பெண் மருத்துவர் கொலை: கிரைம் சீன் மாற்றப்பட்டதா? - வைரலான புகைப்படத்திற்கு போலீசார் விளக்கம்

Published On 2024-08-31 09:38 IST   |   Update On 2024-08-31 09:38:00 IST
  • குற்றம் நடந்த இடத்தில பலர் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
  • விசாரணை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர் பாக போலீசில் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

பெண் டாக்டர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாகவே முன்வந்து எடுத்து விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, "குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் உங்கள் மகள் தற்கொலை செய்து இறந்து விட்டார்" என்றும் பொய் கூறப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்தது.

சிபிஐ-ன் குற்றச்சாட்டுக்களை மறுத்த கொல்கத்தா போலீசார், குற்றம் நடந்த இடம் மாற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.

குற்றம் நடந்த இடத்தில பலர் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது குறித்தும் கொல்கத்தா போலீசார் விளக்கம் அளித்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் சம்பவம் இடத்தில இருந்த அனைவரும் அந்த இடத்தில இருப்பதற்கான அதிகாரம் படைத்தவர்கள் என்றும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரின் பெயர்களையும் தெரிவிப்பதாக கொல்கத்தா போலீஸ் டி.ஜி.பி. இந்திரா முகர்ஜி கூறினார்

Tags:    

Similar News